tag:blogger.com,1999:blog-34553222339087568522024-03-13T20:34:17.724+05:30காலக் கண்ணாடிUnknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3455322233908756852.post-59853414227634563382010-12-12T17:23:00.011+05:302010-12-16T16:16:07.259+05:30உங்கள் வீட்டினருக்கும் “அந்த” சுதந்திரம் உண்டா, கவிஞர் வாலி அவர்களே?
மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவிதான்! தமிழனாய் பிறந்த யாரும் விரும்பியோ, முயற்சி செய்தோ தமிழனாக பிறக்கவில்லை என்று தமிழ்நாட்டில் பேசினால் அடிவிழலாம். இத்தகைய உணர்வுமயமான தமிழ்நாட்டில்தான் தமிழின் பெயரால் அரசியலிலும், இலக்கியத்திலும் இன்னும் மற்ற துறைகளிலும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டமும் வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் முக்கியமானவர் கவிஞராக அறியப்படும் திரைப்பட பாடலாசிரியர் வாலி! எப்படி எப்படி சமைஞ்சது எப்படி என்ற திரைப்பட பாடல் உட்பட இவருடைய எழுத்தில் காணப்படும் வக்கிரம் மற்றும் ஆபாசம் குறித்து எத்தனைதான் எடுத்துக்கூறினாலும் திருந்தாத நபராகவே வலம் வருகிறார்.

இலக்கியங்களில் எப்போதும் இரண்டுவகை இருக்கும். குடிமக்களின் சார்பில் ஆட்சியில் இருப்பவர்களை நோக்கி கேள்வி எழுப்பும் வகை ஒன்று. ஆட்சியில் இருப்பவர்களின் தயவில் வாழ்ந்து கொண்டு மக்களை முட்டாளாக்கும் இலக்கியவாதிகள் இரண்டாம் வகையினர். அதில் வாலி எந்த வகை என்று வாசகர்களே தீர்மானம் செய்யலாம்.

வாலி அண்மைக்காலமாக “ஆனந்தவிகடன்” இதழில் “நினைவு நாடாக்கள் - ஒரு rewind” என்ற கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார். அண்மைக்காலமாக சமூகப் பிரசினைகளில் கூர்மையான கவனம் செலுத்திவரும் ஆனந்த விகடனுக்கு எங்கிருந்து என்ன நிர்பந்தமோ! மற்ற பல நல்ல அம்சங்களின் இடையே திருஷ்டிப் பரிகாரம் போல இந்த பகுதியும் வெளியாகிறது.

வாலியின் வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் இங்கு கவிதை நடையில் பதிவு செய்யப்படுகிறது. உண்மையில் புல்லரிக்க வைக்கும் தத்துவங்களையே தமிழ் கூறும் நல்லுலகிடம் அருளாசியாக வழங்குகிறார் வாலியார்!

சுயமரியாதையோடு வாழ்வது என்பது வீண்! ஆதிக்கச் சக்திகளிடம் அடிபணிந்து அவர்களின் கால்களை நக்கிப் பிழைப்பதே  திறமை! கயமைத்தனமான அரசியலில் வெற்றிகரமாக பங்கேற்பதே வாழும் வழி! சுயநலமே முன்னேறுவதற்கான முதல் படிக்கல்! சந்தர்ப்பவாதமே சாணக்கியத்தனம்! என்பது உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களை தமிழ் மக்களுக்கு உபதேசம் செய்யவே இந்த கட்டுரைத் தொடர் என்பது படிக்கப்படிக்க தெரிகிறது.

எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்புக்காக தனக்கு ஏற்பட்ட அவமானங்களை துடைத்துப் போட்டுவிட்டு பாட்டெழுதிய கதையை இவரைப்போல பெருமிதமாக சொல்லிக்கொள்ள யாராலும் முடியாது. “செருப்பால் அடித்தால் என்ன? பிறகுதான் சந்தனம் தெளித்தாரே!” என்று ஒரே பெருமைதான். சரி அதுகூட அவர் சொந்த விவகாரம் விட்டுவிடலாம்.

சோப்புப் போடுவது என்பதில் மனிதருக்கு டாக்டரேட் பட்டமே வழங்கலாம். (கல்வி வள்ளல்கள் கவனிக்க! டாக்டர் பட்டத்துக்கு பதிலாக உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை பிறக்கலாம்!!) நாத்திகர் என்று தம்மை அறிவித்துக் கொள்ளும் கருணாநிதியிடம் இவர் கூறினாராம்: “நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்கள் நாவில் சரஸ்வதி இருக்கிறாள்; இல்லையேல் இப்படித் தகத்தகாயமாகத் தமிழ் தரையிறங்காது உங்கள் குரல்வழி; விரல் வழி!” இதைக் கேட்ட கருணாநிதி புன்னகையோடு கட்டை விரலால் காதுமடலை வருடிக் கொண்டாராம். இது கருணாநிதி நல்ல மூடில் இருந்தால் செய்யும் மேனரிஸமாம்.

புகழ்போதையின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதரை மென்மேலும் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது! இதற்கு பிரதிபலனாகத்தான் முரசொலி அறக்கட்டளையின் விருது வழங்கப்பட்டிருக்குமோ?

“சரஸ்வதி நாவில் குடியிருந்தால்தான் தகத்தகாயத் தமிழ் வரும்!” என்ற முட்டாள்தனமான கருத்தை கருணாநிதி கேட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் பிறந்த குழந்தைகூட அதை ஏற்காதே! பிறந்தவுடன் தாயின் தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் ; சிறுவராக இருக்கும்போது கிட்டுப்புள்ளு, கண்ணாமூச்சி, கபடி, ஊஞ்சல் என்று அனைத்து வகை விளையாட்டுகளிலும் தாமே பாடல்களைப்பாடி விளையாண்ட தமிழர்கள் ; வயலில் உழைக்கும்போதுகூட ஏற்றப்பாடல், நடவுப்பாடல், நெற்குத்திப் பாடல் என்று ஆயிரம் பாடல்வகைகள் பாடியவர்கள் ; காதல் முதல் அரசியல் வரை அனைத்து அம்சங்களையும் நையாண்டிப் பாடலாகவும் சோகத்தைக்கூட இலக்கிய நயமான ஒப்பாரிப்பாடலாகவும் பாடிய – பாடும் இனமாயிற்றே எங்கள் தமிழினம்.  இந்த தமிழர்கள் உமது மதிகெட்ட கருத்துகளை ஏற்கமாட்டார்கள் மிஸ்டர் வாலி!

அடுத்து அவர் போடுவதுதான் பிரம்மாஸ்திரம்! கவித்திறன் என்பது கற்றுப் பெறுவதல்லவாம். அது கடாட்சத்தால் பெறுவதாம். அதற்கு ஒரு கதை சொல்கிறார்: தன் பிள்ளையை கவியாக்க விரும்பிய ஒரு தாயிடம் ஒரு முனிவன் கூறினாராம், “நான் சொல்லும் மந்திரத்தை உன் குழந்தை ஒரு பிணத்தின் மீது அமர்ந்து ஜெபித்தால் நீ விரும்பும்படி உன் மகன் கவிஞனாவான்” என்று. அந்தத் தாயும் தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு மார்பில் குழந்தையை அமர்த்தி மந்திரத்தை ஜெபிக்க வைத்தாளாம். குழந்தை மந்திரத்தை ஜெபித்தபோது அந்தக் குழந்தைக்கு தெரியாமல் ஒரு வாள்மூலம் தன் கழுத்தை மெல்ல அறுத்துக் கொண்டு பிணமாகிப் போனாளாம். பிணத்தின் மீதமர்ந்து மந்திரம் ஜெபித்த அந்த குழந்தை பின்னாளில் வடமொழியில் காவ்ய தரிசனம் என்ற காவியத்தை படைத்த மஹாகவி வித்யாபதியாம்! அட கொலைகாரர்களே! இது போல் எத்தனை தாய்மார்களை எதற்காகவெல்லாம் கொலை செய்யப்போகிறீர்கள்?  பெற்றதாய் தற்கொலை செய்துகொண்டால் அந்த குழந்தையை யார் காப்பாற்றுவார் என்று எங்கள் வீட்டில் பள்ளிக்கே செல்லாத குழந்தைகூட கேள்விகேட்கும்  திருவாளர் வாலி அவர்களே!

ஒரு வேளை நீங்கள் கவிஞராகும் முயற்சியில் யாரையேனும் கொலை செய்திருக்கலாம். அதையும் போதையில் உளறிவிடாதீர்கள். ஆட்சி மாறினால் சட்டம் உங்கள் மீது பாய்ந்துவிடப் போகிறது.

ஐந்தே வயதில் குழலூதி குவலயத்தை மயக்கிய மேதையாம் டி. ஆர். மகாலிங்கம்! குருவருள் இல்லாமலேயே திருவருளால் இதைச் சாதித்த அந்த மகாலிங்கத்திற்கு மதுவோடு மட்டன் சுக்கா என்றால் மிகவும் பிரியமாம். அதையும் நம்ம வாலி முனியாண்டி விலாசிலிருந்து வாங்கித் தருவாராம். டி.ஆர்.மகாலிங்கம் புல்லாங்குழல் மேதையாக காரணம் இறையருளா அல்லது மதுபான அருளா என்பதை விசாரிக்க வேண்டும். அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

அடுத்து அண்ணன் வாலி வழிபடுவது, “நிஷ்காம்ய கர்மம்”. அதாவது இட்டபணியை விருப்பு வெறுப்பின்றி செய்வது!  ஹிந்தி திரைப்படங்களில் பணியாற்றிய இசையமைத்த நவுஷத் அலியும், பாடகர் படேகுலாம் அலிகானும் இறைபக்தி மிகுந்த இஸ்லாமியர்களாம். ஆனாலும் அவர்கள் சினிமாவுக்காக இந்துக் கடவுளை புகழ்ந்து பாடுவதை தவிர்க்கவில்லையாம். அதேபோல இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த ஷாரூக் கான் இந்துக்கள் கூறும் “ஓம்! சாந்தி! ஓம்!” என்ற படத்தில் மறுப்பின்றி நடித்தாராம். அந்தப்படத்தின் இயக்குனர்கூட புகழ்வாய்ந்த பெண் நடன இயக்குனராம். (அந்தப் பெண்ணின் பெயரை சொல்லக்கூட மனம் வரவில்லை அண்ணன் வாலிக்கு) இதை எல்லாம் ஏன் இவர் குறிப்பிட வேண்டும் என்பதை பார்க்கவேண்டும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இந்துமத விவகாரங்கள் திரைப்படத்தில் வரும்போது வேலை செய்கிறார்கள். ஆனால் ஏ.ஆர். ரகுமான் அவர் நம்பும் கொள்கைக்கு எதிரான அம்சங்களை தவிர்க்கிறார் என்று சத்தமின்றி ஒரு குற்றச்சாட்டு. நியூ என்ற படத்திற்கு “காலையில் தினமும்.. கண் விழித்தால் நான்... கைதொழும் தெய்வம் அம்மா!” என்ற வாலியின் வரிகளுக்கு இசை அமைக்க அவர் முன் வரவில்லையாம். இஸ்லாமிய மதத்தில் தெய்வத்தையும் தாயையும் ஒன்றாக கருதுவதில்லை எனவே வேறு வார்த்தை போடுமாறு ரகுமான் கேட்டுள்ளார். அதற்கு வாலியும் தெய்வம் என்பதை தேவதை என்று மாற்றி தந்துவிட்டார். (இல்லாவிட்டால் வாய்ப்பு போய்விடுமே!) இங்கு வாலி வெளிப்படையாக சொல்லாமல் இலைமறை காயாக சொல்வது இதுதான்: ஏ.ஆர்.ரகுமான் ஒரு மதஅடிப்படைவாதி. அவருக்கு நிஷ்காம்ய கர்மம் தெரியவில்லை.

ஒரு மனிதன் அவர் ஏற்றுக்கொண்ட மதத்திற்கு நேர்மையாக இருப்பது ஒரு குற்றமா? வாலியைப்போலவோ, அவரால் புகழப்படுபவர்களைப்போலவோ காசு வந்தால் “எதையும்” செய்யத் தயாராக இருப்பதுதான் நிஷ்காம்ய கர்மம்! நல்ல வேளையாக சினிமா உலகில் செல்வாக்கோடு இருந்த ஆட்டோ சங்கர் சினிமா தயாரிக்கவில்லை. ஆட்டோ சங்கர் சினிமா தயாரித்திருந்தால் அதில் பாட்டெழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்திருந்தால் ஆட்டோ சங்கரின் நிஷ்காம்ய கர்மத்தை புகழ்ந்து ஒரு காவியமே படைத்திருப்பார் வாலி.

உங்களுக்கு விருப்பமான அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஊழல்புகார்களில் சிக்கி வருகிறார்கள். அதுகூட “நிஷ்காம்ய கர்மம்”தானா தத்துவப்பேராசான் வாலி அவர்களே!

இந்தியாவின் சுதந்திர பொன்விழாவை அண்ணன் வாலி கொண்டாடியவிதம் இந்திய இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரணம்.

1972, ஆகஸ்ட் 15!

கண்ணதாசனிடமிருந்து ஒரு கால்!

“வாலி! கவிதா ஹோட்டலுக்கு நைட் எட்டு மணிக்கு வாங்க: சுதந்திரத்தின் வெள்ளிவிழாவை – நள்ளிரவில் ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டாடுறோம்”

கண்ணதாசனும் நம் அண்ணன் வாலியும் மதுவின் போதையில் தள்ளாடியவாறே  இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சில பாடல்களை பாடி சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றினார்களாம்.

பிறகு நிறைபோதையில் இருந்த அண்ணன் வாலி மிகுந்த தேசபக்தியுடன் ஒரு பாலியல் தொழிலாளியான பெண்ணுடன் அங்கிருந்த அறை ஒன்றுக்குள் ஐக்கியமானாராம்.

அப்போது ஓட்டலின் பணியாளர் ஒருவர் கண்ணதாசனிடம், “வாலியை கேவலப்படுத்த இது சரியான சந்தர்ப்பம்: காவல்துறைக்கு தகவல் சொல்லலாமா?” என்று கேட்டாராம். ஆனால் கண்ணதாசன் அவ்வாறு சொன்ன ஓட்டல் பணியாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டு, “நான் கூப்பிட்டு வந்த வாலியை போலிசுல பிடிச்சுக் கொடுக்க சொல்றியா? அந்த ஆளு (வாலி) ரூமை விட்டு வெளியே வந்தவுடனே ஒழுங்கா கார்ல ஏத்தி அனுப்பு!” என்று சொல்லிவிட்டு தள்ளாடியவாறே வீட்டுக்குப் போனாராம். ஆயிரம்தான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணதாசனின் பெருந்தன்மை போற்றத்தக்கதாம். நம்ம வாலி அண்ணன் சொல்றாரு.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் இதுதான்: சுதந்திர தினம் என்றால் தண்ணியடித்துவிட்டு கேடுகெட்டவர்களுடன் சுற்றித்திரிய வேண்டும். போதையில் வாயில் வந்ததையெல்லாம் உளற வேண்டும். பிறகு பாலியல் தொழிலாளர்களுடன் பொழுதை உல்லாசமாக கழிக்க வேண்டும்.

நல்லது வாலி! உங்கள் தேசபக்தியை புரிந்து கொண்டோம்!

ஒரு சந்தேகம். பாலியல் தொழிலாளர்களுடன் பொழுதைக் கழிக்கும் சுதந்திரம் உங்களுக்கு மட்டுமா? அல்லது உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உண்டா? அது குறித்து அவர்களும் கவிநடையில் காவியம் படைப்பார்களா? அந்த காவியங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஏராளமான ஊடகங்கள் இருக்கின்றனவே. அதன்மூலம்கூட நிறைய பணம் சம்பாதிக்க முடியுமே வாலி!

நல்லது ரங்கராஜ அய்யங்கார்! கவிஞர் வாலியாகவோ அல்லது காவாளியாகவோ வாழ்வது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் பொறுக்கித் தனங்களையும், பிழைப்புவாதத்தையும் வாழும் நெறியாக பொதுமைப்படுத்தி எழுதி தமிழர்களின் சிந்தனையை நஞ்சாக்காதீர்கள்.

அன்று கொல்லும் அரசன் உங்கள் பாக்கெட்டில் இருக்கலாம். நின்று கொல்லும் தெய்வமும் உங்கள் கவித்வத்திற்கு மயங்கி வாளாவிருக்கலாம். ஆனால் தமிழர்கள் அவ்வாறு எல்லாம் இனியும் இருக்க மாட்டார்கள். அண்மையில் உங்களைப் போன்ற ஒருவன் லண்டன் விமான நிலையத்தில் தப்பி ஓடிய செய்தியை படித்தீர்கள்தானே?

-டார்வின் சார்வாகன்

(Darwin.Charvakan@gmail.com)
Unknownnoreply@blogger.com18tag:blogger.com,1999:blog-3455322233908756852.post-10363029547083614892009-02-13T11:57:00.005+05:302009-02-17T12:23:50.366+05:30நான் கடவுளா? சாத்தானா?
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீதும், உடல் ஊனமுற்றவர்கள் மீதும் சமூகத்தின் பார்வை திரும்பி வரும் நிலையில் மேற்கண்டவர்களின் வாழ்வை கதைக் களனாகக் கொண்ட “நான் கடவுள்” திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த சேது, நந்தா, பிதாமகன் ஆகிய படங்களும்கூட பிறழ்மனநிலை கொண்டவர்களை முக்கிய பாத்திரங்களாக கொண்டவர்களாகவே இருந்தது. இந்த மூன்று படங்களிலும் பாலா முன்வைத்த கருத்துகள் அனைத்தும் மிகவும் பிற்போக்குத்தனமானவையே. பொதுக்கருத்தில் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று கருதப்பட வேண்டியவர்களை அவர்களின் மரணம் காரணமாக புனிதப்படுத்தும் காரியத்தையே பாலா திட்டமிட்டோ - திட்டமிடாமலோ செய்து வந்தார், அமீர் பருத்திவீரனில் சற்று வித்தியாசமாக செய்ததுபோல. ஆனால் இந்த பரிமாணங்கள் உரியமுறையில் அலசப்படாமலே இந்த படங்களுக்கான விமர்சனங்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்தன. பிரபல இயக்குனர்களின் படங்களையோ – வெற்றிகரமாக ஓடும் படங்களையோ நமது இதழ்கள் எப்போதுமே உண்மையான விமர்சனம் செய்வதில்லை. பதிலாக அந்தப்படங்களின் புகழ்பாடும் கருத்துகளையே விமர்சனம் என்ற பெயரில் பிரசுரம் செய்கின்றன.

நான் கடவுள் படம் பாலாவின் மற்றப்படங்களில் இருந்து சற்றே வேறுபட்டது. சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் கதைநாயகனாக இருக்கும் பாத்திரம் போக்கிரிகளாகவோ – பொறுக்கிகளாகவோ இருப்பர். நான் கடவுளின் நாயகனோ போதைப்பொருட்களின் உதவியுடன், எரியும் பிணங்களின் நடுவே தன்னையே கடவுளாக உணர்ந்தவன்.

தன்னைப் பெற்றவரின் விருப்பத்திற்கிணங்க – குருவின் கட்டளைக்கிணங்க காசி நகரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள மலைக்கோவில் என்ற இடத்திற்கு வருகிறான். சராசரி மானிட குணத்திலிருந்து பெருமளவில் விலகி கஞ்சா மூலமாக கடவுளை காண்பதில் திருப்தி அடையும் அவன், பெற்றவர்களை கேவலப்படுத்துவதன் மூலம் “நானே கடவுள்” என்பதை பெற்றவர்களுக்கும் உணர்த்துகிறான்.

இதற்கிடையில் அந்த மலைக்கோவிலில் ஏராளமான உடல் - உள்ளம் ஊனமுற்றவர்களை வைத்து பிச்சை எடுக்கும் “தொழிலதிபர்” முக்கிய பாத்திரமாக அறிமுகமாகிறார். அவரது குரூர மனதை உணரவைக்கும் காட்சிகளும் திரையில் வருகிறது. பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊனமுற்ற மனிதர்களை உருப்படிகள் என்ற பெயரில் வணிகம் செய்யும் அந்த தொழிலதிபர் உருப்படிகளை வாங்குவதையும், விற்பதையும், கடத்துவதையும் தொழிலாக கொண்டிருக்கிறார். “நான் கடவுள்” என்று கூறும் கதை நாயகன், மலைக்கோவில் பகுதிக்கு வந்தபின்னும்கூட அந்த தொழில் எந்த தொந்தரவும் இல்லாமல் நடக்கிறது.

கண்பார்வையற்ற கதை நாயகி, இந்த படத்தின் எதிர்நாயகனிடம் சிக்கி அல்லல்படுவதை இயல்பாக ஏற்கிறாள். ஆனால் இதேபோல வேறொரு பிச்சையெடுக்கும் தொழிலதிபரின் வாழ்க்கைத்துணையாக போவதற்கு மறுக்கிறாள். இதிலிருந்து தன்னை காக்குமாறு கிறித்துவ தேவாலயம் ஒன்றின் பெண்துறவியிடம் மன்றாடுகிறாள். ஆனால் இந்த மன்றாடுதலும் பயனளிக்காத நிலையில் “நான் கடவுள்” எனக்கூறும் நாயகனிடம் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை வைக்கிறாள்.

இந்து மதத்தின் அகோரை எனப்படும் பிரிவை சேர்ந்த கதைநாயகனுக்கு அவனது குரு கூறும் முக்கியமான உபதேசம்: வாழ முடியாதவர்களுக்கு நீ தரும் மரணம்: மோட்சம் – பாவிகளுக்கு நீ தரும் மரணம்: தண்டனை! இந்த உபதேசத்தின்படி எதிர்நாயகனுக்கு தண்டனை மரணத்தையும், கதை நாயகிக்கு மோட்ச மரணத்தையும் வழங்கும் கதைநாயகன் காசியில் இருக்கும் குருவை நோக்கி பயணிக்க படம் முடிவடைகிறது.

இந்தப்படம் என்ன கருத்தை முன்வைக்கிறது என்று கேள்வி எழுப்பினால் எந்த கருத்தையும் முன் வைப்பது எங்கள் நோக்கமில்லை என்று இயக்குனர் பாலாவும், வசனமெழுதிய ஜெயமோகனும் பதில் அளிக்கக்கூடும். ஆனால் இந்தப்படம் என்ன பாதிப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

அண்மையில் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனரிலும் பிச்சை எடுக்கும் தொழிலதிபர்களின் கதை வருகிறது – சமூக விமர்சனமாக. அந்த சமூக அவலத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் படமாக ஸ்லம்டாக் மில்லியனர் இருக்கிறது. ஆனால் நான் கடவுள் படமோ இத்தகைய விமர்சனங்கள் ஏதுமின்றி – அது கடவுள் கொடுத்த வாழ்வு (நாத்திகம் பேசுதல் உட்பட) – என்ற அளவில் இருக்கிறது. படத்தில் காட்டப்படும் பிச்சைத் தொழில் அதிபர்கள் உடல் - உள்ளம் ஊனமுற்றவர்களை வைத்து காசு சம்பாதிக்கிறார். பாலாவோ அவர்களோடு பிச்சைத் தொழில் அதிபர்களையும் “உருப்படி” ஆக்கி காசு சம்பாதிக்க முனைகிறார். எந்த விமர்சனமும் இன்றி ஒரு சமூக அவலத்தை காட்டுவதை இப்படித்தான் விமர்சிக்க முடியும்.

மேலும் இவ்வாறு இன்னல்படுபவர்களுக்கு பாலா காட்டும் தீர்வோ கருணை மிகுந்தது. ‘நான் கடவுள்’ நாயகனிடம் தண்டனிட்டு பிரார்த்தித்து மரணத்தை பரிசாக பெற்றுக் கொள்ளலாம். வறுமையை ஒழிக்க வறுமையில் இருப்பவர்களை ஒழித்துவிட திட்டமிட்டு காரியமாற்றும் சிதம்பரம் வகையறா அரசியல்வாதிகளின் அரசியலின் மற்றொரு பரிமாணமாக பாலாவின் இந்தப் படமும் இருக்கிறது.

இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கத்தைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும் நிறைவளிப்பதாக தொழில் நுட்ப விற்பன்னர்கள் கூறக்கூடும். குறிப்பாக நடிப்பு, இசை, படத்தொகுப்பு போன்றவற்றுக்காக இந்தப்படம் புகழப்படலாம். ஆனால் இந்த அம்சங்கள் படத்தின் பார்வையாளனை உணர்வு ரீதியாக பாதிப்பதில்லை. கதையும், திரைக்கதையும், இயக்கமுமே பார்வையாளனை தீவிரமாக பாதிக்கும் இயல்பு வாய்ந்தவை.

பாலாவின் இந்தப்படத்தைவிட எஸ்.ஜே. சூர்யாவோ, சிலம்பரசனோ, ஷங்கரோ எடுக்கும் படங்கள் சமூகத்தை சிறிதளவே கெடுக்கும்.
Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3455322233908756852.post-19171073845635080432009-02-12T16:05:00.004+05:302009-02-12T16:17:34.569+05:30ஆனந்த "விகடன் தாத்தா" ஆரம்பிக்கும் பலான பத்திரிகை!
லீவுல மாமா ஊருக்குப் போயிருந்தான் சின்னப்பயல் சித்தண்ணா! அவனோட மாமா பையன் கொஞ்சம் முத்துன கட்டை. இவனையும் கூட்டிகிட்டு ஒரு நைட் கிளப்புக்கு போனான். அங்கே டான்ஸ் ஆடின லேடிஸ் திடீர்னு ஒவ்வொரு டிரஸ்ஸா கழட்டி, கடைசியா பிறந்த மேனிக்கு நிக்கவும்.... சித்தண்ணா அலறிகிட்டே அந்த நைட் கிளப்பைவிட்டு வெளியே ஓட ஆரம்பிச்சான். பின்னாடியே துரத்தி வந்து மடக்கின மாமா பையன், “என்னாடா ஆச்சு?”னு கேட்டான். சித்தண்ணா, “பொம்பளைங்க பிறந்த மேனியா இருக்கிறதைப் பார்க்கவே கூடாதுன்னு எங்க அப்பா-அம்மா சொல்லியிருக்காங்கடா! அப்படிப் பார்த்தா நம்ம உடம்பு கல்லா மாறிப்போயிடுமாம்!” அப்படின்னு சொல்ல... மாமா பையன் விழுந்து, விழுந்து சிரிச்சுக்கிட்டே, “உங்க அப்பாம்மா சக்கையா ஏமாத்தியிருக்காங்கடா” என்றான். சித்தண்ணனோ, “கிடையாதுடா. அவங்க உண்மைதான் சொல்லியிருக்காங்க. இப்பவே என் உடம்புல கொஞ்சம் கல்லா மாற ஆரம்பிச்சுடுச்சு!” என்றானாம்.

வாசகர்களின் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொள்ளும் பத்திரிகைகளில் ஆனந்த விகடன் தமிழ் வார இதழ்களில் நம்பர் 1. ஆன்மீகம், இலக்கியம், அரசியல் என்று ஆரம்பித்த இந்த பத்திரிகையின் போக்கில் அறிவியல், வணிகம், வேளாண்மை, புலனாய்வு என்று புத்தம் புதிய அம்சங்கள் அவ்வப்போது அறிமுகமாவது வழக்கமானதுதான். அதன்மூலம் தனியான வாசக தளம் ஒன்றினை உருவாக்கி, பின்னர் அந்த வாசக தளத்தையே இலக்காக கொண்டு தனியான இதழ்களை (உ-ம். ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், சுட்டி விகடன், மோட்டார் விகடன்) கொண்டுவருவது விகடனின் சாமர்த்தியம். எவ்வகையிலாவது பொதுமக்களிடம் படிக்கும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்திவிட்டு, அதன்பின் நல்ல தரமான எழுத்துகளை அறிமுகப்படுத்தும் விகடனின் பாணி மிகவும் போற்றுதலுக்குரியது. இந்தப்பணியோ காலத்தின் கட்டாயம்!

மேற்கண்ட புத்தகங்களை வாங்கும் வாசகர்கள் பதின்ம வயதை கடந்தவர்களாகவோ, அல்லது குழந்தைகளாகவோ இருப்பதால், பதின்ம வயதினரை தன்வயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விகடன் தாத்தா. இதற்காகத்தான் அண்மையில் விகடன் இதழ்களில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கவர்ச்சி கன்னிகளின் படங்கள் இடம் பெறுகின்றன. மேலும் இளமை காம்பவுண்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பகுதி, ரொமான்ஸ் ரூம் – கடலை கம்னாட்டி - மன்னிக்கவும் - கம்யூனிட்டி போன்ற பெயர்களில் தொடர்ந்து வருகின்றன. ஆனாலும் தமிழகத்தின் பதின்ம வயதினர் போதிய பக்குவம் பெறுவதில் பெரும் தேக்க நிலை இருப்பதால் அதனை சமாளிக்க “விகடன் தாத்தா” வயாக்ரா விற்பனையிலும் இறங்கிவிட்டார். பெயரை சற்று மாற்றி வயாக்ரா தாத்தா சொன்ன விபரீதக்கதைகள் என்ற பெயரில் பிரசுரம் செய்யப்படுகிறது. அதில் ஒரு சாம்பிள்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது (ஆனந்தவிகடன் 11-02-09 தேதியிட்ட இதழ்).

இதெல்லாம் எதற்கு? என்று கேட்கிறீர்களா! காமசூத்திரம் படைத்த நாட்டின் இளைஞர்கள் பாலியல் குறித்த அறிவின்றி இருக்கலாமா. அதற்காக ஆரம்பித்த “அறிந்தும், அறியாமலும்” தொடர் தெரிந்தோ, தெரியாமலோ முடிந்துவிட்டது. அடுத்து சகோதரப்பத்திரிகைகளின் பாணியில் நடிகனின் கதையோ, நடிகையின் கதையோ வெளியிட்டால் மேலும் அதிக பதின்ம வயதினரை மட்டும் அல்லாமல் வாலிப-வயோதிக அன்பர்களையும் கவரலாம்.

உலகப்பொருளாதாரம் தற்போது உதை வாங்கியுள்ள நிலையில் தமிழ்கூறும் நல்லுலகின் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திருமணவாழ்வு என்பது கட்டுப்படியாகாமல் போய்விடக்கூடும். எனவே அந்த இளைஞர்களின் பாலியல் தேவையை ஈடு செய்ய விகடன் மாமா – மன்னிக்கவும் – தாத்தா இளைஞர்களுக்காக விரைவில் “டேட்டிங் பத்திரிகை” ஆரம்பிக்க உள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் முன்னோட்டமாகவே “வயாக்ரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்” என்ற புதிய பகுதியை விகடன் தாத்தாவே சிறப்பு கவனத்துடன் கொண்டுவருகிறார். இதைத் தொடர்ந்து விரைவில் தமிழக இளைஞர்களின் அனைத்து பாலியல் தாபங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் விரைவில் புதிய பத்திரிகை வெளிவரவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3455322233908756852.post-9118021624739573982009-02-12T16:03:00.000+05:302009-02-12T16:04:40.833+05:30காலக் கண்ணாடி - அறிமுகம்கண்ணாடிகளில் பலவகை உண்டு.

பெரிதாக்கி, சிறிதாக்கி காட்டும் கண்ணாடிகள் உண்டு.

இடவலம் மாற்றிக்காட்டும் கண்ணாடிகள் உண்டு.

நிறம் மாற்றும் கண்ணாடிகள் உண்டு.

அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடிகள் உண்டு.

ஆனால் உள்ளே உள்ளதை உணர்த்தும் கண்ணாடிகள் உண்டா?

இதோ, காலக்கண்ணாடி.Unknownnoreply@blogger.com0