12.12.10

உங்கள் வீட்டினருக்கும் “அந்த” சுதந்திரம் உண்டா, கவிஞர் வாலி அவர்களே?

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவிதான்! தமிழனாய் பிறந்த யாரும் விரும்பியோ, முயற்சி செய்தோ தமிழனாக பிறக்கவில்லை என்று தமிழ்நாட்டில் பேசினால் அடிவிழலாம். இத்தகைய உணர்வுமயமான தமிழ்நாட்டில்தான் தமிழின் பெயரால் அரசியலிலும், இலக்கியத்திலும் இன்னும் மற்ற துறைகளிலும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டமும் வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் முக்கியமானவர் கவிஞராக அறியப்படும் திரைப்பட பாடலாசிரியர் வாலி! எப்படி எப்படி சமைஞ்சது எப்படி என்ற திரைப்பட பாடல் உட்பட இவருடைய எழுத்தில் காணப்படும் வக்கிரம் மற்றும் ஆபாசம் குறித்து எத்தனைதான் எடுத்துக்கூறினாலும் திருந்தாத நபராகவே வலம் வருகிறார்.

இலக்கியங்களில் எப்போதும் இரண்டுவகை இருக்கும். குடிமக்களின் சார்பில் ஆட்சியில் இருப்பவர்களை நோக்கி கேள்வி எழுப்பும் வகை ஒன்று. ஆட்சியில் இருப்பவர்களின் தயவில் வாழ்ந்து கொண்டு மக்களை முட்டாளாக்கும் இலக்கியவாதிகள் இரண்டாம் வகையினர். அதில் வாலி எந்த வகை என்று வாசகர்களே தீர்மானம் செய்யலாம்.

வாலி அண்மைக்காலமாக ஆனந்தவிகடன் இதழில் நினைவு நாடாக்கள் - ஒரு rewind” என்ற கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார். அண்மைக்காலமாக சமூகப் பிரசினைகளில் கூர்மையான கவனம் செலுத்திவரும் ஆனந்த விகடனுக்கு எங்கிருந்து என்ன நிர்பந்தமோ! மற்ற பல நல்ல அம்சங்களின் இடையே திருஷ்டிப் பரிகாரம் போல இந்த பகுதியும் வெளியாகிறது.

வாலியின் வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் இங்கு கவிதை நடையில் பதிவு செய்யப்படுகிறது. உண்மையில் புல்லரிக்க வைக்கும் தத்துவங்களையே தமிழ் கூறும் நல்லுலகிடம் அருளாசியாக வழங்குகிறார் வாலியார்!

சுயமரியாதையோடு வாழ்வது என்பது வீண்! ஆதிக்கச் சக்திகளிடம் அடிபணிந்து அவர்களின் கால்களை நக்கிப் பிழைப்பதே திறமை! கயமைத்தனமான அரசியலில் வெற்றிகரமாக பங்கேற்பதே வாழும் வழி! சுயநலமே முன்னேறுவதற்கான முதல் படிக்கல்! சந்தர்ப்பவாதமே சாணக்கியத்தனம்! என்பது உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களை தமிழ் மக்களுக்கு உபதேசம் செய்யவே இந்த கட்டுரைத் தொடர் என்பது படிக்கப்படிக்க தெரிகிறது.

எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்புக்காக தனக்கு ஏற்பட்ட அவமானங்களை துடைத்துப் போட்டுவிட்டு பாட்டெழுதிய கதையை இவரைப்போல பெருமிதமாக சொல்லிக்கொள்ள யாராலும் முடியாது. செருப்பால் அடித்தால் என்ன? பிறகுதான் சந்தனம் தெளித்தாரே!” என்று ஒரே பெருமைதான். சரி அதுகூட அவர் சொந்த விவகாரம் விட்டுவிடலாம்.

---

சோப்புப் போடுவது என்பதில் மனிதருக்கு டாக்டரேட் பட்டமே வழங்கலாம். (கல்வி வள்ளல்கள் கவனிக்க! டாக்டர் பட்டத்துக்கு பதிலாக உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை பிறக்கலாம்!!) நாத்திகர் என்று தம்மை அறிவித்துக் கொள்ளும் கருணாநிதியிடம் இவர் கூறினாராம்: நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்கள் நாவில் சரஸ்வதி இருக்கிறாள்; இல்லையேல் இப்படித் தகத்தகாயமாகத் தமிழ் தரையிறங்காது உங்கள் குரல்வழி; விரல் வழி! இதைக் கேட்ட கருணாநிதி புன்னகையோடு கட்டை விரலால் காதுமடலை வருடிக் கொண்டாராம். இது கருணாநிதி நல்ல மூடில் இருந்தால் செய்யும் மேனரிஸமாம்.


புகழ்போதையின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதரை மென்மேலும் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது! இதற்கு பிரதிபலனாகத்தான் முரசொலி அறக்கட்டளையின் விருது வழங்கப்பட்டிருக்குமோ?

சரஸ்வதி நாவில் குடியிருந்தால்தான் தகத்தகாயத் தமிழ் வரும்! என்ற முட்டாள்தனமான கருத்தை கருணாநிதி கேட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் பிறந்த குழந்தைகூட அதை ஏற்காதே! பிறந்தவுடன் தாயின் தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் ; சிறுவராக இருக்கும்போது கிட்டுப்புள்ளு, கண்ணாமூச்சி, கபடி, ஊஞ்சல் என்று அனைத்து வகை விளையாட்டுகளிலும் தாமே பாடல்களைப்பாடி விளையாண்ட தமிழர்கள் ; வயலில் உழைக்கும்போதுகூட ஏற்றப்பாடல், நடவுப்பாடல், நெற்குத்திப் பாடல் என்று ஆயிரம் பாடல்வகைகள் பாடியவர்கள் ; காதல் முதல் அரசியல் வரை அனைத்து அம்சங்களையும் நையாண்டிப் பாடலாகவும் சோகத்தைக்கூட இலக்கிய நயமான ஒப்பாரிப்பாடலாகவும் பாடிய பாடும் இனமாயிற்றே எங்கள் தமிழினம். இந்த தமிழர்கள் உமது மதிகெட்ட கருத்துகளை ஏற்கமாட்டார்கள் மிஸ்டர் வாலி!

---

டுத்து அவர் போடுவதுதான் பிரம்மாஸ்திரம்! கவித்திறன் என்பது கற்றுப் பெறுவதல்லவாம். அது கடாட்சத்தால் பெறுவதாம். அதற்கு ஒரு கதை சொல்கிறார்: தன் பிள்ளையை கவியாக்க விரும்பிய ஒரு தாயிடம் ஒரு முனிவன் கூறினாராம், நான் சொல்லும் மந்திரத்தை உன் குழந்தை ஒரு பிணத்தின் மீது அமர்ந்து ஜெபித்தால் நீ விரும்பும்படி உன் மகன் கவிஞனாவான் என்று. அந்தத் தாயும் தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு மார்பில் குழந்தையை அமர்த்தி மந்திரத்தை ஜெபிக்க வைத்தாளாம். குழந்தை மந்திரத்தை ஜெபித்தபோது அந்தக் குழந்தைக்கு தெரியாமல் ஒரு வாள்மூலம் தன் கழுத்தை மெல்ல அறுத்துக் கொண்டு பிணமாகிப் போனாளாம். பிணத்தின் மீதமர்ந்து மந்திரம் ஜெபித்த அந்த குழந்தை பின்னாளில் வடமொழியில் காவ்ய தரிசனம் என்ற காவியத்தை படைத்த மஹாகவி வித்யாபதியாம்! அட கொலைகாரர்களே! இது போல் எத்தனை தாய்மார்களை எதற்காகவெல்லாம் கொலை செய்யப்போகிறீர்கள்? பெற்றதாய் தற்கொலை செய்துகொண்டால் அந்த குழந்தையை யார் காப்பாற்றுவார் என்று எங்கள் வீட்டில் பள்ளிக்கே செல்லாத குழந்தைகூட கேள்விகேட்கும் திருவாளர் வாலி அவர்களே!

ஒரு வேளை நீங்கள் கவிஞராகும் முயற்சியில் யாரையேனும் கொலை செய்திருக்கலாம். அதையும் போதையில் உளறிவிடாதீர்கள். ஆட்சி மாறினால் சட்டம் உங்கள் மீது பாய்ந்துவிடப் போகிறது.

---

ந்தே வயதில் குழலூதி குவலயத்தை மயக்கிய மேதையாம் டி. ஆர். மகாலிங்கம்! குருவருள் இல்லாமலேயே திருவருளால் இதைச் சாதித்த அந்த மகாலிங்கத்திற்கு மதுவோடு மட்டன் சுக்கா என்றால் மிகவும் பிரியமாம். அதையும் நம்ம வாலி முனியாண்டி விலாசிலிருந்து வாங்கித் தருவாராம். டி.ஆர்.மகாலிங்கம் புல்லாங்குழல் மேதையாக காரணம் இறையருளா அல்லது மதுபான அருளா என்பதை விசாரிக்க வேண்டும். அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

டுத்து அண்ணன் வாலி வழிபடுவது, நிஷ்காம்ய கர்மம். அதாவது இட்டபணியை விருப்பு வெறுப்பின்றி செய்வது! ஹிந்தி திரைப்படங்களில் பணியாற்றிய இசையமைத்த நவுஷத் அலியும், பாடகர் படேகுலாம் அலிகானும் இறைபக்தி மிகுந்த இஸ்லாமியர்களாம். ஆனாலும் அவர்கள் சினிமாவுக்காக இந்துக் கடவுளை புகழ்ந்து பாடுவதை தவிர்க்கவில்லையாம். அதேபோல இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த ஷாரூக் கான் இந்துக்கள் கூறும் ஓம்! சாந்தி! ஓம்! என்ற படத்தில் மறுப்பின்றி நடித்தாராம். அந்தப்படத்தின் இயக்குனர்கூட புகழ்வாய்ந்த பெண் நடன இயக்குனராம். (அந்தப் பெண்ணின் பெயரை சொல்லக்கூட மனம் வரவில்லை அண்ணன் வாலிக்கு) இதை எல்லாம் ஏன் இவர் குறிப்பிட வேண்டும் என்பதை பார்க்கவேண்டும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இந்துமத விவகாரங்கள் திரைப்படத்தில் வரும்போது வேலை செய்கிறார்கள். ஆனால் ஏ.ஆர். ரகுமான் அவர் நம்பும் கொள்கைக்கு எதிரான அம்சங்களை தவிர்க்கிறார் என்று சத்தமின்றி ஒரு குற்றச்சாட்டு. நியூ என்ற படத்திற்கு காலையில் தினமும்.. கண் விழித்தால் நான்... கைதொழும் தெய்வம் அம்மா! என்ற வாலியின் வரிகளுக்கு இசை அமைக்க அவர் முன் வரவில்லையாம். இஸ்லாமிய மதத்தில் தெய்வத்தையும் தாயையும் ஒன்றாக கருதுவதில்லை எனவே வேறு வார்த்தை போடுமாறு ரகுமான் கேட்டுள்ளார். அதற்கு வாலியும் தெய்வம் என்பதை தேவதை என்று மாற்றி தந்துவிட்டார். (இல்லாவிட்டால் வாய்ப்பு போய்விடுமே!) இங்கு வாலி வெளிப்படையாக சொல்லாமல் இலைமறை காயாக சொல்வது இதுதான்: ஏ.ஆர்.ரகுமான் ஒரு மதஅடிப்படைவாதி. அவருக்கு நிஷ்காம்ய கர்மம் தெரியவில்லை.

ஒரு மனிதன் அவர் ஏற்றுக்கொண்ட மதத்திற்கு நேர்மையாக இருப்பது ஒரு குற்றமா? வாலியைப்போலவோ, அவரால் புகழப்படுபவர்களைப்போலவோ காசு வந்தால் எதையும் செய்யத் தயாராக இருப்பதுதான் நிஷ்காம்ய கர்மம்! நல்ல வேளையாக சினிமா உலகில் செல்வாக்கோடு இருந்த ஆட்டோ சங்கர் சினிமா தயாரிக்கவில்லை. ஆட்டோ சங்கர் சினிமா தயாரித்திருந்தால் அதில் பாட்டெழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்திருந்தால் ஆட்டோ சங்கரின் நிஷ்காம்ய கர்மத்தை புகழ்ந்து ஒரு காவியமே படைத்திருப்பார் வாலி.

உங்களுக்கு விருப்பமான அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஊழல்புகார்களில் சிக்கி வருகிறார்கள். அதுகூட நிஷ்காம்ய கர்மம்தானா தத்துவப்பேராசான் வாலி அவர்களே!

---

ந்தியாவின் சுதந்திர பொன்விழாவை அண்ணன் வாலி கொண்டாடியவிதம் இந்திய இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரணம்.

1972, ஆகஸ்ட் 15!

கண்ணதாசனிடமிருந்து ஒரு கால்!

வாலி! கவிதா ஹோட்டலுக்கு நைட் எட்டு மணிக்கு வாங்க: சுதந்திரத்தின் வெள்ளிவிழாவை நள்ளிரவில் ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டாடுறோம்

கண்ணதாசனும் நம் அண்ணன் வாலியும் மதுவின் போதையில் தள்ளாடியவாறே இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சில பாடல்களை பாடி சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றினார்களாம்.

பிறகு நிறைபோதையில் இருந்த அண்ணன் வாலி மிகுந்த தேசபக்தியுடன் ஒரு பாலியல் தொழிலாளியான பெண்ணுடன் அங்கிருந்த அறை ஒன்றுக்குள் ஐக்கியமானாராம்.

அப்போது ஓட்டலின் பணியாளர் ஒருவர் கண்ணதாசனிடம், வாலியை கேவலப்படுத்த இது சரியான சந்தர்ப்பம்: காவல்துறைக்கு தகவல் சொல்லலாமா?” என்று கேட்டாராம். ஆனால் கண்ணதாசன் அவ்வாறு சொன்ன ஓட்டல் பணியாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டு, நான் கூப்பிட்டு வந்த வாலியை போலிசுல பிடிச்சுக் கொடுக்க சொல்றியா? அந்த ஆளு (வாலி) ரூமை விட்டு வெளியே வந்தவுடனே ஒழுங்கா கார்ல ஏத்தி அனுப்பு!” என்று சொல்லிவிட்டு தள்ளாடியவாறே வீட்டுக்குப் போனாராம். ஆயிரம்தான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணதாசனின் பெருந்தன்மை போற்றத்தக்கதாம். நம்ம வாலி அண்ணன் சொல்றாரு.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் இதுதான்: சுதந்திர தினம் என்றால் தண்ணியடித்துவிட்டு கேடுகெட்டவர்களுடன் சுற்றித்திரிய வேண்டும். போதையில் வாயில் வந்ததையெல்லாம் உளற வேண்டும். பிறகு பாலியல் தொழிலாளர்களுடன் பொழுதை உல்லாசமாக கழிக்க வேண்டும்.

நல்லது வாலி! உங்கள் தேசபக்தியை புரிந்து கொண்டோம்!

ஒரு சந்தேகம். பாலியல் தொழிலாளர்களுடன் பொழுதைக் கழிக்கும் சுதந்திரம் உங்களுக்கு மட்டுமா? அல்லது உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உண்டா? அது குறித்து அவர்களும் கவிநடையில் காவியம் படைப்பார்களா? அந்த காவியங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஏராளமான ஊடகங்கள் இருக்கின்றனவே. அதன்மூலம்கூட நிறைய பணம் சம்பாதிக்க முடியுமே வாலி!

நல்லது ரங்கராஜ அய்யங்கார்! கவிஞர் வாலியாகவோ அல்லது காவாளியாகவோ வாழ்வது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் பொறுக்கித் தனங்களையும், பிழைப்புவாதத்தையும் வாழும் நெறியாக பொதுமைப்படுத்தி எழுதி தமிழர்களின் சிந்தனையை நஞ்சாக்காதீர்கள்.

அன்று கொல்லும் அரசன் உங்கள் பாக்கெட்டில் இருக்கலாம். நின்று கொல்லும் தெய்வமும் உங்கள் கவித்வத்திற்கு மயங்கி வாளாவிருக்கலாம். ஆனால் தமிழர்கள் அவ்வாறு எல்லாம் இனியும் இருக்க மாட்டார்கள். அண்மையில் உங்களைப் போன்ற ஒருவன் லண்டன் விமான நிலையத்தில் தப்பி ஓடிய செய்தியை படித்தீர்கள்தானே?

-டார்வின் சார்வாகன்

(Darwin.Charvakan@gmail.com)

18 கருத்துகள்:

Sketch Sahul சொன்னது…

சுய நலம் மிகுந்து விட்டது. பணத் தேடலின் விளைவாலும், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று சொத்து சேர்ப்பதன் விளைவாலும் பலர் தங்களது நல்ல இயல்புகளை இழந்துவிட்டார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//கவிஞர் வாலியாகவோ அல்லது காவாளியாகவோ வாழ்வது உங்கள் விருப்பம்.//

வாலியின் நா..நயம் எனக்கு பிடிக்கும் மற்றபடி.......உங்க கருத்து சரிதான்.
:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இக்கட்டுரைத் தொடரை; இதையும் அறிவோம் எனப் படிக்கிறேன். சில நெருடலே!
ஒளிவு மறைவு அற்றவர் எனச் சிலர் போற்றுகிறார்கள்..;
ஆனாலும் அவர் தமிழுக்குப் போதையுண்டு. மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

பெயரில்லா சொன்னது…

Very Nice. Vaalikku Ithu Thevaithaan.

Maharaja

rvelkannan சொன்னது…

நல்லதொரு கட்டுரை நண்பரே ...
வாலி வெளிப்படையானவர் என்ற ஒரு கூற்று உண்டு. அதனாலேயே அவர் என்ன வேண்டுமானாலும் செய்யவோ எழுதவோ கூடாதாது தான். மிக சிறந்த தமிழ் கவியின் திறமை அவருக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.
அந்த திறமையை எப்படியெல்லாம் தரமற்று உபயோகபடுத்துகிறார் என்பது கண்டிக்கதக்கது.
அப்படியான ஒரு கடுமையான எதிர்ப்பை செய்து உள்ளீர்கள். வாழ்த்துகள்
அப்படியே ஒரு வேண்டுகோள் :
//அண்மைக்காலமாக சமூகப் பிரசினைகளில் கூர்மையான கவனம் செலுத்திவரும் ஆனந்த விகடனுக்கு//
இப்படியெல்லாம் நம்பி விடாதீர்கள் நண்பரே. நாம் என்றுமே கவனத்துடன் தான் இருக்க வேண்டும் நண்பரே

பெயரில்லா சொன்னது…

நெத்தியடி..

சதீஷ் சொன்னது…

அரசர்களைப் புகழ்ந்து பாடி பொற்கிழிகளைப் பெற்று செல்வது புலவர்களின் இயல்பு.

வாலி அதைத்தான் செய்கிறார். ஓவரா நெஞ்ச நக்குவாரு சில நேரத்துல.
கொஞ்சம் பொறுங்கள் இவர் கருணாநிதி காவியம் படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வலையுகம் சொன்னது…

நன்றி நண்பரே
///சுயமரியாதையோடு வாழ்வது என்பது வீண்! ஆதிக்கச் சக்திகளிடம் அடிபணிந்து அவர்களின் கால்களை நக்கிப் பிழைப்பதே திறமை! கயமைத்தனமான அரசியலில் வெற்றிகரமாக பங்கேற்பதே வாழும் வழி! சுயநலமே முன்னேறுவதற்கான முதல் படிக்கல்! சந்தர்ப்பவாதமே சாணக்கியத்தனம்! என்பது உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களை தமிழ் மக்களுக்கு உபதேசம் செய்யவே இந்த கட்டுரைத் தொடர் என்பது படிக்கப்படிக்க தெரிகிறது.//

அந்த தொடரை நான் படித்தபோது எனக்குள் எழுந்த அதே கேள்விகளை எழுத்துக்களாக கானுகிறேன்
இது ஒரு வகையில் என்னுடைய என்னபதிவு

பெயரில்லா சொன்னது…

saar, ithellam solla ungalukku nejamave thaguthi unda enna? summa oc la blog kodutha kandathayum olara koodathu. yokkiyan vaaran. somba eduthu ulle vai.

பெயரில்லா சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
saar, ithellam solla ungalukku nejamave thaguthi unda enna? summa oc la blog kodutha kandathayum olara koodathu. yokkiyan vaaran. somba eduthu ulle vai. //

ithai solla enna thaguthi venum saar? kaasu vangitu elutharavan olunga eluthina oc-la elutharavan summa irukkalam. yaar yokkiyannu kaalam mudivu seyyum. unga nattamai sombai pathirama parthukkunga.

காலக் கண்ணாடி சொன்னது…

கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

நண்பர் வேல் கண்ணன் அவர்களே!

"ஆனந்த "விகடன் தாத்தா" ஆரம்பிக்கும் பலான பத்திரிகை!" - இது இந்த வலைபதிவின் இரண்டாவது கட்டுரை.

தவறு செய்தால் குட்டி வைப்பதும், நல்லது செய்தால் தட்டிக்கொடு்ப்பதும்தானே வரவேற்கத்தக்கது.

எச்சரிக்கையாகவும் இருப்போம். யார் நல்லது செய்தாலும் பாராட்டும் தெரிவிப்போம்.

Srinivasan Durai Raj. சொன்னது…

வாலி பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது.

தன் தொழிலை தக்க வைத்துக்கொள்ள , அதுவும் சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள, ஒவொருவரும் செய்யும் தொழில் நுணுக்கத்தை தான் வாலியும் செய்திருக்கிறார்.

இதில் பார்ப்பனர் , பார்ப்பனர் அல்லாதோர் என்று வேறு பாடு இல்லை. ஜால்ரா போடுவதும் , கூஜா தூக்குவதும் ( ஜாதி மதம், மொழி, மற்றும் மாநிலம் கடந்த ) சினிமாவுக்கே உரித்தான தொழில் நுணுக்கங்கள். இதில் தேறினவர்கள் தான் நம் கண்ணுக்கு தெரிகிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள். சுத்தமாக சரக்கு இல்லாதவர்கள் நீடித்து நிற்க முடியாது. வந்த மாயத்தில் மறைத்துவிடுவார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆக வாலி அவர்கள் இதில் நன்கு தேர்ந்திருக்கிறார்கள்.

கட்டுரையில் சில கருத்துக்கள் பரவாயில்லை. ஆனால் மொத்தத்தில் கட்டுரையில் நடு நிலைமையான விமர்சனம் இல்லை. எதோ வெறுப்பை கொட்டி தீர்திருப்பதாக தான் தெரிகிறது . கட்டுரை ஆசிரியருக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன். இப்படிப்பட்ட கட்டுரைகளை தவிர்க்கவும்.

ரெங்கநாயகி சொன்னது…

ஜால்ரா போடுவதிலும், கூஜா தூக்குவதிலும் கண்ணதாசன் துவங்கி இன்றைய வைரமுத்து, பா.விஜய் வரை அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்.

அதற்காக அவர்களுடைய அந்தரங்க அசிங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது தேவையில்லாத ஒன்று.

ஒருவருடைய இயல்பால் வெறுப்புற்று கண்டனம் தெரிவிக்கும்போது வரும் இயல்பான படைப்பாகவே இந்த கட்டுரை இருக்கிறது.

இதுபோன்ற மாற்றுக் கருத்து, மாற்றுப் பார்வை கொண்ட கட்டுரைகளை தொடர்ந்து அடிக்கடி வெளியிடுங்கள்.

வாழ்த்துகள்!

பெயரில்லா சொன்னது…

அருமையான கருத்துகள். ஆனந்த விகடன் நிர்வாகத்திற்கும் அனுப்புங்கள்.

பெயர் சொல்ல விருப்பமில்லை. சொன்னது…

ஓசியி்ல் ஒரு பிளாக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

மஹாத்மா காந்திகூட அவர் வாழ்க்கையி்ல் செய்த தவறுகளை பகிரங்கமாக எழுதியிருக்கிறார்.

அது மற்றவர்களும் அதை செய்யக்கூடாது என்பதற்காகத்தானே, அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல.

பார்வை கோணலாக இருந்தால் அனைத்தும் கோணலாகத்தான் தெரியும்.

prem kumar சொன்னது…

இவர் பத்து வருடங்களுக்கு முன்பே நான் காசுக்காகவும் mass க்க்காகவும் தான் பாட்டு எழுதுகிறேன் என்று சொன்னவராட்சே

பெயரில்லா சொன்னது…

தனித்தமிழ் என்ற கொள்கை இல்லாதவர்,சமைஞ்சது எப்படி போன்ற ஆபாச பாடல்களை இயற்றியவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட வேண்டியவர்தான் வாலி. ஆனால், ஜால்ரா என்ற வளையத்தை எப்போதுமே அவர் அணிந்துக் கொள்வது கிடையாது. அது, அவரை சுற்றி இருப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும். அவரை லேசில் மசிய வைக்க முடியாது என்பதும் அவரது அருகில் இருப்பவர்களுக்கு தெரியும்.. கருணாநிதி மீது அவர் காட்டும் அன்பு, ஜால்ரா மாதிரி தெரியும். அதற்கு பல்வேறு காரணங்கள், தொடர்புகள், நட்பு விவகாரங்கள். கருணாநிதியை பாராட்டுவதை தவிர்த்து, அவர் யாரையும் லேசில் பாராட்ட மாட்டார். மேடை நாகரீகம் கருதி சிலரை பாராட்டுவார். அதே வேளையில், கருணாநிதியிடம் ஒரு நாள் கூட ஒரு ஆப்ளிகேஷன் கேட்டு, சென்றதில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

பெயரில்லா சொன்னது…

இணையத்தில் எதையோ தேடியபோது இந்த கட்டுரை பார்க்க நேர்ந்தது. மிக நல்ல கட்டுரை. மிகத் தேர்ந்த எழுத்து.
இதேபோல முகத்திரை கிழிக்கவேண்டியவர்கள் பலரும் உள்ளனர். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துகள்!

-வல்லவன்

கருத்துரையிடுக